(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு மறை மாவட்ட கத்தோலிக்க இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளுக்கு செயல் முறையிலான ஆங்கிலம் இலகுபடுத்தல் மற்றும் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மறை மாவட்ட கத்தோலிக்க இளையோர் சம்மேளன இயக்குனர் அருட்பணி டெரன்ஸ் றாகல் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் ஆங்கில அடிப்படையிலான செயல் முறை மூலமான கருத்தரங்கினை வளவாளராக சிரேஷ்ட விரிவுரையாளர் ஜொசுவா ஜெரிசாந்தும், காலநிலை மாற்றம் தொடர்பான செயலமர்வினை மட்டக்களப்பு மறை மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமுகத்தினரும், கலந்து கொண்டு இளைஞர், யுவதிகளுக்குத் தெளிவூட்டல்களை வழங்கினர்.
இச்செயலமர்வில் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 42 இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர்.