ஹமாஸ் அமைப்பின் மிக முக்கிய தளபதி தமது விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஹமாஸின் டெய்ர் அல்-பலாஹ் படைப்பிரிவின் தளபதி வேல் அசேபா என்பவரே இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டவராவார்.
கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இவரே திட்டமிட்டதாக இஸ்ரேல் படைப்பிரிவு தெரிவித்தது.
முன்னதாக, அசேபா 1992 மற்றும் 1998 க்கு இடையில் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இஸ்ரேலிய படைப்பிரிவிற்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
விடுதலையான பின்னர், இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் இராணுவப் படைகள் மீதான தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும், அதனை செயற்படுத்துவதிலும் அவர் தொடர்ந்து முக்கிய நபராக செயற்பட்டார் என இஸ்ரேலிய படைத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.