பாடசாலைகளுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 


 பண்டாரவளை பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த பகுதியில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட எவரேனும் தாம் பணியாற்றும் பாடசாலைக்கு சமூகமளிக்க சிரமம் ஏற்படும் நிலையில், அருகில் உள்ள பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பிரதேசத்தில் உள்ள 144 பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத் தெரிவித்துள்ளார்.