சிரேஷ்ட ஊடகர் இரா.துரைரத்தினம் எழுதிய "கிழக்கில் சிவந்த சுவடுகள்" நூல் வெளியீடு!






















(கல்லடி செய்தியாளர்)

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தினால் சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய "கிழக்கில் சிவந்த சுவடுகள்" நூல் இன்று சனிக்கிழமை (04) மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க உறுப்பினரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான செல்லையா பேரின்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன் பிரதம அதிதியாகவும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், சிரேஷ்ட ஊடகவியலாளரும், விரிவுரையாளருமான அ.நிக்ஷன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது வெளியீடு செய்யப்பட்ட "கிழக்கில் சிவந்த சுவடுகள்" நூலின் அறிமுகவுரையினை முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரும், நூல் நயவுரையினை சிரேஷ்ட எழுத்தாளர் கி.துரைராசசிங்கமும் நிகழ்த்தினர்.

இங்கு வெளியீடு செய்யப்பட்ட நூலின் முதல் பிரதியினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பெற்றுக் கொண்டார்.

இறுதியாக ஏற்புரையையும், நன்றியுரையையும் இணைத்து சிரேஷ்ட ஊடகவியலாளரும், நூலாசிரியருமான இரா.துரைரத்தினம் நிகழ்த்தினார்.