தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் வாங்க சென்ற இருவரின் பரிதாப நிலை .

 


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் வாங்க சென்ற இருவரில் ஒருவர் டெவோன் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காணாமல் போயுள்ளதாகவும் திம்புலபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல்போன இருவரில் ஒருவர் நீர்வீழ்ச்சிக்கு கீழே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றொருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(12.11.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

திம்புலபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தில் வசிக்கும் பழனியாண்டி மோகன்ராஜ் என்ற 42 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே நீர்வீழ்ச்சிக்கு கீழே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் அதே தோட்டத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பாலமாணிக்கம் வேலுகுமார் என்பவரே காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.