(கல்லடி செய்தியாளர்)
மட்டு ஊடக அமையத்தின் நான்காவது ஆண்டு நிறைவும், ரீசேட் அறிமுகமும் இன்று வியாழக்கிழமை (02) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
மட்டு ஊடக அமையத் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர்களுக்கான ரீசேட்டும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ஸ்ணகுமார் தெரிவித்ததாவது:-
மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் தம்மிடையேயுள்ள பேதங்களை மறந்து மட்டு ஊடக அமையத்தில் இணைந்து பயணிக்க முன்வர வேண்டுமென்றார்.
இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.