மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே நேற்று (09) நாடளாவிய ரீதியில் மின்சாரம் விநியோகம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 


நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் 80% மின்சார விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

எஞ்சியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான சீரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக  நேற்று(09) நாடளாவிய ரீதியில் மின்சாரம் விநியோகம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.