கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் 1,661 குடும்பங்களை சேர்ந்த 5,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

 


கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், கண்டாவளை பிரதேசத்தில் 321 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 96 குடும்பங்கள் பாடசாலையில் தஞ்சமடைந்துள்ளது.

அவர்களுக்கான சமைத்த உணவுகள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உப தபாலகம் உள்ளிட்ட பொது மக்கள் சேவை நிலையங்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய  சீரற்ற வானிலையால் 1,661 குடும்பங்களை சேர்ந்த 5,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.