மட்டக்களப்பு கல்லடி உப்போடை ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலை நடத்திய உயர்வை நோக்கிச் செல்லும் விழா- 2023
























































(










 

 

 




 


 








 







 











































 












































 

 



















   

கல்லடி செய்தியாளர்)


மட்டக்களப்பு கல்லடி உப்போடை  ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலை நடத்திய உயர்வை நோக்கிச் செல்லும் விழா  வெள்ளிக்கிழமை (08) விபுலானந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மகராஜ் மற்றும் உதவிப் பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரார்ச்சிதானந்தஜீ மகராஜ் ஆகியோரும், பிரதம அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட பீடாதிபதி பீடாதிபதி தி.சதானந்தன் மற்றும் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கி.ரமேஸ் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி பாலர் கல்விப் பணியக வெளிக்கள உத்தியோகத்தர் சாம்பசிவம் பரணீதரன் மற்றும் மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பொறுப்பாளர் திருச்செல்வம் மேகராஜூம் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது 2024 ஆம் ஆண்டு தரம் -01 இற்கு பாடசாலைகளில் இணையவுள்ள 56 சிறார்கள் பட்டமளித்துச் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் தசாவாதாரம் நாடகம் மற்றும் நாட்டிய நிகழ்வுகள் பார்ப்போரைக் கவர்ந்தன.