மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இலக்கிய விழா -2023

 


 







 
































































































 

 மண்முனை வடக்கு பிரதேச  செயலகமும், மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய இலக்கிய விழா 2023.12.08.ம் திகதி அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம் பெற்றது

 .
பிரதேச செயலாளர் பா . வாசுதேவன் தலைமையில் நடை பெற்ற இலக்கிய விழாவில் உதவி பிரதேச செயலாளர் லசனியா  பிரசாத் ,உதவி திட்டமில் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் பெற்றோர்கள் என  பலரும் கலந்து கொண்டனர் 

.
கவிஞர் வியன்சீர் , மற்றும் மூத்த கவிஞர்கள் முரளிதரன், குணநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர் . மும்  மொழிகளிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன .
மேலும் எழுத்தாளர்களும் ,கவிஞர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள் .