கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஒரு வருட கைவினைப் பொருட்கள் டிப்ளோமா பாடநெறிக்காக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பயிற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்றைய தினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நிருவாக உத்தியோகத்தர் வே.தவேந்திரன் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ.நவநாயகம் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவின் களுவாஞ்சிகுடி மற்றும் களுதாவளை ஆகிய பயிற்சி நிலையங்களுக்காக சுமார் 80 பயிலுனர்களை தெரிவுசெய்வதற்காக பங்குபற்றிய விண்ணப்பதாரிகளின் தகைமைகள் பரீட்சிக்கப்பட்டு ஆவணங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் போது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (கிராம அபிவிருத்தி), பயிற்சி நிலைய ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளம் யுவதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.