வெலிகந்த, கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் உள்ள 50 கைதிகள் இன்று (11) தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக தப்பிச் சென்ற கைதிகளுள் 15 பேர் சற்று முன்னர் காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தப்பிச் சென்றுள்ள ஏனைய கைதிகளை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்றவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.