இலங்கையில் 18வீத VAT வரி நடைமுறைக்கு வந்ததும் டீசல் லீற்றரின் விலை 63 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் டீசல் தற்போது 346 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கூட இந்த VAT வரிக்கு உட்படுத்தப்படும் என்றும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் கடற்றொழில் துறை ஏற்கனவே சீர்குலைந்துள்ளது.
இந்தநிலையில் 18 வீத VAT வரியை அமுல்படுத்துவதன் மூலம் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அவலத்திற்கு உள்ளாகும் எனவும் தெரிவித்துள்ளார்.