நைஜீரிய இராணுவத்தினருக்கு சொந்தமான கடுனா கிராமத்தின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 85 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தவறுதலாக நடத்தப்பட்டதாக நைஜீரிய இராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளது.
தாக்குதல் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி போலா டினுபு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயுதமேந்திய கும்பல்களின் செயலில் உள்ள பகுதியாகக் கருதப்படும் இந்தப் பகுதி, அடிக்கடி வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகிறது.
இந்த தாக்குதலில் மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.