மட்டக்களப்பு - கல்குடா, கல்மடு பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளனர்.

மட்டக்களப்பு - கல்குடா, கல்மடு பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நேற்று முன்தினம்  முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்மடு பகுதியைச் சேர்ந்த 53 மற்றும் 56 வயதான இருவர் கடந்த வெள்ளிக் கிழமை மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இருவரும் இதுவரை கரை திரும்பவில்லை என உறவினர்கள் கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.