ஹெல்ப் எவர் பவுண்டேசனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இரத்ததானம்.


(கல்லடி செய்தியாளர்)

"உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்" எனும் தொனிப் பொருளுக்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இரத்தத் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில், மட்டக்களப்பு  ஹெல்ப்பவர் பவுண்டேசன் தனது 05 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை (09) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது..

இதன்போது ஹெல்ப்பவர் பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 91 பேர் தமது உதிரத்தைத் தானமாக வழங்கினர்...குருதி கொடை வழங்கிய கொடையாளிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 இவ் குருதிக்கொடை நிகழ்வில் மட்டக்களப்பு வைத்தியசாலை வைத்தியர், மற்றும் தாதியர்கள் குருதியினைச் சேகரித்தமை குறிப்பிடத்தக்கது.