ஹமாஸ் அமைப்பை உடனடியாக சரணடைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

 

காச முனைகளில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையானது இஸ்ரேல் - ஹமாஸ் ஆகிய இரு தரப்புக்களிலும் இருந்து பல்லாயிரம் உயிர்களை காவு கொண்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையானது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களை கடந்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பை உடனடியாக சரணடைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் ஆனால் ஹமாஸ் அமைப்பின் அழிவு ஆரம்பித்துவிட்டது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு தனது அழைப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், ''இது பாலஸ்தீன அமைப்புகளின் முடிவு. எல்லாம் முடிந்துவிட்டது, உங்கள் தலைவர் சின்வாருக்காக நீங்கள் உயிரை விட வேண்டாம். சரண்டைந்துவிடுங்கள்'' என கூறியுள்ளார்.