குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று இலங்கை பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனரா ?

 



இலங்கையில் 2019 மற்றும் 2022 க்கு இடையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டிலிருந்து பிறப்பு வீதங்கள் தொடர்ச்சியாகக் குறைந்துள்ள போதிலும், 2019 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

2023 ஜூலை 01 நிலவரப்படி மொத்தம் 268,920 பிறப்புகள் பதிவாகியுள்ளன, 2022 இல் மொத்தம் 275,321 பிறப்புகள் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகள், பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு முறைகள், உலகளாவிய தொற்றுநோய்கள் போன்ற காரணங்களால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.