ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் நானே வெற்றி பெறுவேன் .

 

சிறிலங்காவின் அடுத்த அதிபராக தாம் நியமிக்கப்படுவது தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில்  சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபராக தாம் தெரிவு செய்யப்படுவதாக ஊடகவியளாலர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக தாம் களமிறங்குவது தொடர்பில் ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.      

இலங்கையின் பொருளாதாரத்தை சீரான பாதையில் கொண்டு செல்லக்கூடடிய திட்டங்கள் தம்மிடம் இருப்பதாக ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.