ரீ.எல்.ஜவ்பர்கான்
யுக்திய போதையொழிப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் மத்தியூஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலில் ஐஸ் போதைப் பொருள் வர்த்தகரான பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
55 வயதுடைய குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டிலுள்ள அலுமாரியிலிருந்து ஐஸ் போதைப் பொருள் பக்கெட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட பெண் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.