நமுனுகுல - பூட்டாவத்த பகுதியில் நீராட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என நமுனுகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மொனராகலை, அலியாவத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தமது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த இளைஞர், மேலும் இரண்டு இளைஞர்களுடன் அந்த பகுதியிலுள்ள நீரோடையொன்றில் நேற்று முற்பகல் நீராடச் சென்றுள்ளார்.
அதன்போதே, அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்