மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கிரான் ஊடாக கோராவெளி செல்லும் பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பொதுமக்கள் போக்குவரத்திற்காக கடும் இன்னல்களை எதிர் கொண்டுள்ளார்கள்.அன்றாட தேவைகளுக்காக பயணங்களை மேற்கொள்ள முடியாதவாறு பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
தோணிகள் மூலமாக பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்வதை காணக்கூடியதாக உள்ளது