திருகோணமலை காவல்துறை பிரிவுட்குட்பட்ட பாலையூற்று பிரேதசத்தில் தற்கொலைக்கு முயற்சித்த தாய் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது, இன்று (03) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உறவினர் ஒருவருக்கு 20 பவுண் நகை வழங்கியமை தொடர்பில் தாய்க்கும், மகளுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இருவரும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.