தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கூறி விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் தனக்காக பிராத்தித்த அனைவருக்கும் நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 18ஆம் திகதி போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார்.

 இந்நிலையில் விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெற்றுவந்தார்.

21நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் பூரண குணம் அடைந்து நேற்று(11) அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்ததும் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கூறி விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.