பணம் பெற்றுக் கொண்டு அப்பட்டமான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் --எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

போலி செய்திகளை கட்டமைத்து பரப்பும், ஊடகங்கள் என்று கூறிக்கொள்ளும் பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து ரணிலும் சஜித்தும் ஒன்று சேர்வதாக பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் என்றும், இந்த பிரசாரம் உண்மைக்கு புறம்பானது என்றும், ஒருபோதும் ரணிலும் சஜித்தும் இணைய மாட்டார்கள் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எனவே அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு இவ்வாறான அப்பட்டமான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.