உயிரிழந்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் , மேற்பார்வையாளராக பணியாற்றிய பெண் விளக்கமறியலில் .

 


சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 1 நாள் விளக்கமறியலில் (நாளை (04) வரை)  வைக்குமாறு  கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல். நதீர்   உத்தரவிட்டுள்ளார்.

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்  சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸார் சனிக்கிழமை(2) கைது செய்யப்பட்ட பின்னர் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் இன்று (03) ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 28 வயதுடைய  குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவர் திருகோணமலை மாவட்டம்  உப்புவெளி  நித்தியபுரி பிரதான வீதியை சேர்ந்தவராவார்.