2024 ஆம் ஆண்டினை வரவேற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான ஆராதனை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டினை வரவேற்கும் வழிபாடுகள் ஆயரினால் முன்னெடுக்கப்பட்டதுடன் பக்தர்களுக்கு அருள்ஆசி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
புனித மரியாள் பேராலயத்தின்
பங்குத்தந்தை ஜோர்ச் ஜீவராஜ் அடிகளார், அருட்சகோதரிகள், பொது நிலையினர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த அன்னையின் பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.