(எம்.எஸ்.எம் றசீன்)
ஏறாவூர் நகரசபையின் புதிய ஆண்டுக்கான கடமைச் செயற்பாடுகள் இன்று காலை செயலாளர் எம்.எம்.எம்.ஹமீம் தலைமையில் நகரசபை முன்றலில் ஆரம்பிக்கப்பட்டன.
செயலாளரினால் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின புதிய ஆண்டில் நகரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அவர் உரை நிகழ்த்தினார்
நகரசபை உத்தியோகத்தர்களுக்கான முதலாவது ஒன்றுகூடல் நிகழ்வும் இன்று காலை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்றது.
சபையின் கணக்காளர் எம்.ஆர்.எப் புஷ்ரா, நிருவாக உத்தியோகத்தர் நபிறா ரசீன், நிதி உதவியாளர் நிஸா லாபிர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் சாஜிதா இர்பான், நானாவித வருமானப்பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.எஸ். நளீபா, ஆதனவரிப்பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஈ.எல் பரீதா, உள்ளூராட்சி உதவியாளர் சுல்பிகா ஜின்னா, உட்பட உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.