மட்டக்களப்பு கிரிக்கட் வீரர்களுக்கிடையிலான நட்பு உறவுகளை மேம்படுத்தவும் வீரர்களின் திறமைகளை இனம்காணும் முகமாகவும் எமது மாவட்டத்தினை மையப்படுத்தி ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள BATTICALOA PREMIER LEAGUE 2024
போட்டிக்கான ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் ஏசியன் அணித்தலைவர் வி்.விஜிதரன் தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட ரீதியல் பிரபலமான அணிகளை சேர்ந்த வீரர்கள் அணி உரிமையாளர்கள் மூலம் ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டது விசேட அம்சமாகும் , மேலும் எதிர்வரும் 9 10 11ம் திகதிகளில் இச் சுற்றுப்போட்டி ஆரையம்பதி ஏசியன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது