புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் புத்தாண்டை வரவேற்போம்!





மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டை அனைவரும் புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் ஆரம்பிக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்க வேண்டும்.

எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் கடந்த காலத்தை மீண்டும் மீட்டிப்பார்ப்பதன் மூலமே மனிதன் தனது பாதையில் இன்னல்கள் அற்ற வளமான பலன்களைப் பெறக்கூடியதாக அமைத்துக்கொள்கிறான். அவ்வாறே கடந்த வருடத்தின் தனது அனுபவங்களிலிருந்து கற்கவேண்டிய பாடங்களை கற்று அவற்றை சீர்தூக்கிபார்ப்பதன் மூலமே புதிய எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக்கி கொள்ள முடியும்.

இ்வ்வாண்டு ஒழுக்கம், நல்லிணக்கம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை அடையக்கூடிய பரந்த பாதையில் முன்பை விட கூடுதல் கரிசனையுடனும் கவனத்துடனும் அடையாளம் காணவேண்டிய உறுதிப்பாட்டை கொண்டதாகவே இந்த புத்தாண்டு அமைகின்றது. அனைவருக்கும் புத்தாண்டு நல்வழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.