மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர உதவியை
வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தின் எல்லையான வெருகல் மகாவலி கங்கை பெருக்கெடுத்த காரணமாக அக்கிராமத்தைச் சூழ முற்றாக பாதிக்கப்பட்ட 47 குடும்பங்களை இரண்டு இடைத்தங்கல் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு ஜெர்மன் நாட்டில் வசிக்கும் எஸ்.தனபாலசிங்கம் குடும்பம் வழங்கிய ஒரு லட்சம் ரூபாவினையும்,
சுவிஸ்லாந்து சைவநெறிக்கூடம் ஞானலிங்கோஷ்வரர் ஆலயம் வழங்கிய ஒரு லட்சம் ரூபாவினையும் பயன்படுத்தி உடனடி உதவிகள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வழங்கப்பட்டது.
ஒரு குடும்பத்திற்கு தலா ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் உதவி வழங்கப்பட்டது.
அதில் அரிசி, சீனி, பருப்பு, கடலை, மிளகாய்த்தூள், உப்பு, தேயிலை பக்கற், சோயா பக்கற்றுகள், தோங்காய் பால்மா பெட்டி , பாய் (படுக்கைவிரிப்பு)
ஆகிய உதவிகள்
கதிரவெளி கனிஷ்ட வித்யாலயத்தில் வைத்தும்
வெருகல் கங்கைக்கு அருகாமையில் வைத்தும்
வழங்கப்பட்டன.
இவ்உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன், பேரவை உறுப்பினர்கள், கதிரவெளி கிராம அதிகாரி விஜயராஜா, கதிரவெளி
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து வழங்கி வைத்தனர்.
இரண்டு உதவி வழங்குநர்களின் இரண்டு லட்சம் ரூபாய் நிதி தவிர ஏனைய நிதிகள் பேரவை நிதியில் இருந்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.