மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் தைப்பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.
கலை கலாசார பீட இந்து நாகரீகத்துறையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் நா.வாமன் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக
கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் கலந்துகொண்டார்.
கௌரவ
மற்றும் சிறப்பு அதிதிகளாக – கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி
கலாநிதி வ.குணபாலசிங்கம், மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
வி.ரஞ்சிதமூர்த்தி உள்ளிட்டவர்களுடன் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீக
சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ச.முகுந்தன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக
விரிவுரையாளர்கள் மாணவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அதிதிகள்
மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கல் பொங்கி
சுவாமிக்குப் படைக்கப்பட்டு பூஜை வழிபாட்டுடன்; கலை கலாசார பீட கேட்போர்
கூடத்தில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.