கணவரின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத 35 வயதுடைய தாய் ஒருவர் நேற்று முன்தினம் (30) தனது மூன்று பிள்ளைகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சோகமான செய்தி ஒன்று மாலம்பே கஹந்தோட்டை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
உயிரிழந்த குழந்தைகளில் இரண்டு ஆண்களும் ஒரு பெண் குழந்தையும் அடங்குவதாகவும் அவர்களின் வயது 9, 7 மற்றும் 6 வயதுடையவர்கள் எனவும் மாலம்பே காவல்துறையினர் தெரிவித்தனர்.