கிழக்கு மாகாணத்தின் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்கல் தொடர்பான ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பில்
இடம்பெற்றது.
இலங்கையின்
கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திக்காக உள்ளூர் ஊடகவியலாளர்கள், சிவில்
சமூக அமைப்புக்கள் மற்றும் உள்ளூராட்சி சபையின் முன்னாள் பிரதி
நிதிகளுக்கிடையிலான உறவை அமைப்பதன் மூலம் உண்மைத் தன்மை மற்றும்
வெளிப்படைத் தன்மையை அதிகரித்தலை வலுப்படுத்தும் வகையில், ஏ.எச்.ஆர்.சி
நிறுவனத்தின் ஏற்பாட்டில்
மட்டக்களப்பில் செயலமர்வு நடைபெற்றது.
ஏ.எச்.ஆர்.சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிறுவனத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுலராசா தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில்
நிறுவனத்தின் பிரதி இணைப்பாளர் அழகுராசா மதன், நிறுவன திட்ட முகாமையாளர் நாகேஸ்வரன் மிரேகா, திட்ட இணைப்பாளர் இஸ்மியா,
மற்றும்
வாழைச்சேனை, செங்கலடி,வாகரை ஆகிய பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள்,
உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள்,
ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.