அரசியல்வாதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க சில பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளதாகவும், அத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
"சில பல்கலைக்கழகங்கள் அரசியல்வாதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக நான் அறிந்தேன். இது நிறுத்தப்பட வேண்டும். தயவு செய்து பல்கலைக்கழகங்களை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். பல்கலைக்கழகங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவே உள்ளன.
அரசியல் என்பது அங்கு விவாதிக்கப்படுகிறது. இருப்பினும், அது பாரபட்சமாக இருக்கக்கூடாது. நிகழ்வுகளுக்கு யார் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கப்பட வேண்டும் என்பதை செனட் மற்றும் அதன் கல்வியாளர்கள் தீர்மானிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.