இலங்கை – சீன வர்த்தக முதலீட்டுத் திட்டத்தின் “எக்ஸ்ஃபோ மாத்தலே”யின் கீழ் சீனத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பின்படி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் தரோஹன திஸாநாயக்க அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்தார்.
அங்கு, இலங்கையின் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் பல பயனுள்ள முதலீடுகளுக்காக பல முன்னணி சீன வர்த்தகர்களுடன் சில ஆரம்ப கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நடத்த முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை எதிர்கொள்ளும் கடினமான பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணம் வழங்கும் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முதலீட்டு திட்டங்கள் அவை.
அரசாங்க ஊழியர்களின் நோக்கத்திற்காக மின்சார கார்கள், மின்சார மோட்டார் சைக்கிள்கள் அத்துடன் வர்த்தக சூழலின் அடிப்படையில் இலங்கைக்கு முச்சக்கர வண்டிகள், இலகுரக லொறிகளை கொண்டு வருதல் அல்லது இலங்கையில் உற்பத்திக்கான தொழிற்சாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
விவசாய பொருளாதாரத்தை சீரமைக்க நவீன தொழில்நுட்பத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சோலார் பேனல்கள் நிறுவுதல் மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பது தொடர்பான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட்டதுடன், பல சீன வர்த்தகர்கள் இதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தனர்.