காசாவில் நடந்துவரும் போரில் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் எனவும்,
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்து விடுவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர்
பெஞ்சமின் நேட்டன்யாகு உறுதிபட தெரிவித்து உள்ளார்.
டெல் அவிவில் உள்ள இராணுவ தளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் 100-க்கு மேற்பட்ட பாலஸ்தீன பயங்கரவாதிகளை கொன்று குவித்தனர்.
நாள்தோறும் ஏராளமான பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுகின்றனர். ஹமாசை நாங்கள் முற்றிலும் ஒழித்து விட்டு எங்கள் பிணைக்கைதிகளை மீட்போம். போரில் வெற்றி பெறுவோம்' என சூளுரைத்தார்.