மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்ததால் மூன்று வான் கதவுகள் திறப்பு!

















































 (கல்லடி செய்தியாளர்)

உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட உயர்ந்ததால் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மூன்று வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இதனால் உன்னிச்சை, ஆயித்தியமலை மற்றும் அதனை அண்டிய கிராமங்களின் தாழ்வான பிரதேசங்கள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன.

இதனை அவதானிப்பதற்கான மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான மக்கள் வருகை தருவதைக் காணமுடிந்தது.

அத்தோடு நீரோட்டத்தில் இப்பிரதேச மக்கள் மீன்பிடித்துத் தமது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.