மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் அடைமழையினால் தேங்கியுள்ள வெள்ள நீரினை வழிந்தோடச் செய்யும் பணிகள் முன்னெடுப்பு

 












 

 (எம்.எஸ்.எம். றசீன்)

 மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் தற்போது பெய்துவரும் அடைமழையினால் தேங்கியுள்ள வெள்ள நீரினை வழிந்தோடச் செய்யும் பணிகளை உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொண்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஷ் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடிகான்களை சுத்தம் செய்து வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

ஏறாவூர் மீராகேணி, மிச்நகர் மற்றும் ஐயங்கேணி ஆகிய பகுதிகளில் கனரக வாகனங்களின் மூலம் வடிகான்கள் சீர் செய்யப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஷ் ஏறாவூர் நகரசபை செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் வி. பற்குணன் ஆகியோரும் இதன்போது சமூகமளித்திருந்தனர்.