ஷிவா
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு நிறைவு விழா தொடரை ஆரம்பிக்கும் முகமாக இன்று திங்கள் கிழமை (2024.01.01) காலை சுப வேளையில் மட்டக்களப்பு புதிய கல்லடி பாலத்தின் அருகாமையில் இராம கிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தருக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது
. மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா மஹராஜ் அவர்களால் அடிக்கல் நடும் விழா சிறப்பாக இடம்பெற்றது. இன்று ராமகிருஷ்ண பகவானின் கல்ப தரு தினம் என்பது விசேட அம்சமாகும் .
இவ்
நிகழ்வின் போது ராமகிருஷ்ண மிஷன் உதவி பொது முகாமையாளர், மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வீ.வாசுதேவன் , முன்னாள்
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் திரு .தி .சரவண பவன் ,மட்டக்களப்பு உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் கணேசராசா உட்பட
முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விபுலானந்த அடிகள் அவர்களால் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் இலங்கை கிளை ஸ்தாபிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .