மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகம், சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் பட்டிமன்றப் பேரவை ஆகியன இணைந்து நடத்திய பாராட்டு விழா!





















(கல்லடி செய்தியாளர்)


கதிரவன் கலைக்கழகம், சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் பட்டிமன்றப் பேரவை ஆகியன இணைந்து நடத்திய பாராட்டு விழா இன்று சனிக்கிழமை  நேற்று முன்தினம் (30) புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

கதிரவன் தங்கராசா இன்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும், மட்டக்களப்பு கல்வி வலய ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி உ.விவேகானந்தம் மற்றும் மண்முனைப்பற்று கோட்டக் கல்வி அதிகாரி சீ.தில்லைநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், மண்முனைப்பற்றுக் கோட்டப் பாடசாலை அதிபர்கள், மண்முனைப்பற்று சமூகசேவை உத்தியோகத்தர் இ.சிவலிங்கம் மற்றும் மண்முனைப்பற்று கலாசார உத்தியோகத்தர் திருமதி ராதிகா கருணாகரன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

"பிள்ளைகளுக்காக நாங்கள்" எனும் தொனிப் பொருளுக்கமைய நடத்தப்பட்ட இப்பாராட்டு நிகழ்வில், இவ்வாண்டு நடைபெற்ற தரம்- 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை யில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 65 மாணவர்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது மட்டக்களப்பு கண்ணகி மகாவித்தியாலய மாணவிகளின் வரவேற்பு நடனம், கதிரவன்(2023) நிகழ்வுகளின் நிழல்கள் வெளியீடு, ஆடல், பாடல்,  சிறுவர் நடனம் ப போன்றன அரங்கேற்றப்பட்டன.