யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்கள் இருப்பதகாக 5ம் வட்டாரம் இரணபாலை புதுக்குடியிருப்பில் உள்ள தென்னந் தோட்டத்தில் அகழ்வில் ஈடுபட்டிருந்த 06 பேர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹேரத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலின்படி,
இரணைப்பாலை பிரதேசத்தில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாகச்
சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை தேடும் நோக்கில் அகழ்வுப்
பணியில் ஈடுபட்டிருந்த 06 நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்