பாகிஸ்தானில் பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பொலிசார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள உள்ளது டெரா இஸ்மாயில் கான் மாவட்டம்.
இந்த மாவட்டத்தின் தராபன் தாலுகாவில் உள்ள பொலிஸ் நிலையம் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பொலிஸ் நிலையத்தில் இருந்த 10 பொலிசார் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
பயங்கரவாதிகள் கடுமையான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்து கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.