கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திருத்தப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரையில் வழங்கப்பட்ட 1,450 ரூபாய் என்ற கொடுப்பனவு 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.