தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டிய, நாடு முழுவதும் உள்ள நீர் பாவனையாளர்களது நீர் கட்டண நிலுவையாக சுமார் ரூ.1450 கோடி ரூபா உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு அந்த குடிநீர் பாவனையாளர்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஏற்கனவே தெரிவித்துள்ளது.
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பல நீர் பாவனையாளர்களது நீர் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபையின் பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்திருந்தார்.
இதேவேளை, பொருளாதார சிக்கல்கள் காரணமாக நீர் பாவனையாளர்கள் உரிய நேரத்தில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதை தவிர்த்து வருவதாக சபை அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.