பொது போக்குவரத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்த 18 பேர் கைது.

 


பொதுப் போக்குவரத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யும் நபர்களை இலக்கு வைத்து நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கையின் போது 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ், நேற்று காலை 08.00 – 10.00 மற்றும் 17.00 – 19.00 வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, வீதிகள், பஸ் நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் விசேட கவனத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் பஸ்களில் பயணித்தனர்.

இதன்படி, பொது போக்குவரத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் ஐந்து திருடர்கள் உட்பட 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கம் பொது போக்குவரத்து சேவைகளில் பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதாகும் என்று பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.