மின்சாரசபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு போன்ற தரப்பினர் முன்வைத்த புள்ளிவிபரத் தகவல்கள் மற்றும் மின்சாரக் கட்டணத்தில் தாக்கம் செலுத்தும் ஏனைய சகல விடயங்களையும் விரிவாக மதிப்பாய்வு செய்து தற்பொழுது காணப்படும் மின்சாரக் கட்டணத்தை 33% குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறும் கருத்துக்களை கவனத்தில் கொண்டு மின்சார சபைக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் 2024 ஆம் ஆண்டில் மின்சாரக் கட்டணத்தை ஆகக் குறைந்தது 20% இனால் குறைக்க வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவு க்குப் பரிந்துரைத்துள்ளது.