இலங்கையில் இந்த ஆண்டு (2024) இதுவரை மொத்தம் 83 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
76 சம்பவங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனவரி முதல் இன்று வரை மொத்தம் 1,180 திருட்டு சம்பவங்களும், 310 கொள்ளை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த வருடத்தில் இதுவரை 20 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், 10 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவதாகக் கூறினார்.
எவ்வாறாயினும், நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை பொலிஸார் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.