(கல்லடி செய்தியாளர்)
இலங்கை கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) மட்டக்களப்பு காந்திப் பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் தலைவர் எஸ்.சிவதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை- வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
ஆன்மீக அதிதிகளாக பௌத்த மதம் சார்பில் பாணம பியரத்னஹிமியும், இந்துமதம் சார்பில் சிவபாலன் குருக்களும், கிறிஸ்தவ மதம் சார்பாக கொழும்பு வணபிதா நவீன் பெரேராவும், இஸ்லாமிய மதம் சார்பாக மௌலவி றியாசும் பங்கேற்றிருந்தனர்.
மட்டக்களப்பு பிரஜைகள் சபைத் தலைவர் வர்ணகுலசிங்கம் சிவதர்சன், வட மாகாண கிறிஸ்தவ காங்கிரஸ் பாஸ்டர் எஸ்.ராஜ்குமார், உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.