மட்டக்களப்பு பாலமீன்மடு திராய்மடு மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில்
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, 250 மீனவ சங்க உறுப்பினர்களின்
குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள்
வழங்கப்பட்டன.
சங்கத்தின் தலைவர் வி.மனோகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்கொண்டார்.
மீனவ கூட்டுறவு சங்கத்தின் நிதி அனுசரணையில் சுமார் 7 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களே பகிர்ந்தளிக்கப்பட்டன.
முகத்துவாரத்தினுடாக
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் இறப்பை தவிர்ப்பதற்கு,
முகத்து வார ஆத்துவாயினை ஆழப்படுத்தித் தருமாறு
கோரிக்கை அடங்கிய மகஜரும் அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்பட்டது.
நிகழ்வில்
கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கே.யூ.பி விமலரத்ன, பொலிஸ்
பரிசோதகர் பி.சசிந்திரா, கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்,
மீனவ சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மீனவர்களின் கோரிக்கைக்கு அமைய முகத்துவாரம் வெளிச்ச வீட்டு கட்டடம் மற்றும் மீன் சந்தை கட்டட பகுதியினையும் அரசாங்க அதிபர்
பார்வையிட்டார்.